இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடாமல் பாடசாலைகளை திறக்கமுடியும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.
சில உலக நாடுகள் மாணவர்களுக்கு தடுப்பூசி போடாமல் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இலங்கையிலும் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க முடியும் என வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா பரிந்துரைத்துள்ளார்.
இதேவேளை, மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
03 ஆம் திகதி இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை செப்டம்பர் மாதம் முதலாம் வாரம் ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்ததையடுத்து பாடசாலை ஆரம்பிக்கப்படும் திகதியை உறுதியாக அறிவிக்க முடியாது என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
இதனிடையே ஒரு மாதத்திற்கும் மேலாக ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.