நாட்டின் அனைத்து நிறுவனங்களிலும் கொவிட் தொற்று தொடர்பான அலுவல்களை முன்னெடுக்க அதிகாரியொருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
நியமிக்கப்படும் அதிகாரி பிராந்தியத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரியுடன் தொடர்புகளை பேணுவதன் மூலம் தமது நிறுவனத்தில் கொவிட் தொற்று நிலைமை குறித்த தகவல்களை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு நிறுவன ரீதியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை கண்காணித்து சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் கொரோனா தொற்று சமூகத்தில் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.