இலங்கையில் மேலும் 145 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக 200 ஐ அண்மித்த உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில், நேற்று 150 க்கும் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 68 பெண்களும் 77 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2,640 பேர் இன்று (04) இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 58,766 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 66,339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 82,476 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே நேற்றைய (03) நிலவரப்படி நாட்டில் ஒன்பது மில்லியன் மக்களுக்கு இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்