January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்து தாக்குதல் தொடர்பில் இலங்கையில் வாக்குமூலம் பெற சிஐடி நடவடிக்கை

நியூசிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவரைத் தெரிந்தவர்களிடம் வாக்குமூலம் பெற இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நியூசிலாந்து தாக்குதல் தொடர்பாக இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே, இந்த கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்தாரி 2011 ஆம் ஆண்டு மாணவராக நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.