பஹந்துடாவ ஆபாச வீடியோ வெளியிட்ட சம்பவத்தில் வைரலான புகைப்படம் தொடர்பில் தம்பதி ஒன்று சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளது.
பஹந்துடாவ நீர்வீழ்ச்சியில் ஆபாச வீடியோ பதிவிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் வேறொரு தம்பதியை தொடர்புபடுத்தி, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
பஹந்துடாவ என்பது சுற்றுலா செல்லும் இடம் என்பதால், அங்கு சென்றிருந்த வேறொரு தம்பதியின் புகைப்படத்தை, குறித்த ஆபாச வீடியோ சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், தமக்கு வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தம்பதி தெரிவித்துள்ளது.