June 13, 2025 19:56:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உடல் வெப்பநிலையை அளவிடும் நடமாடும் இராணுவத்தினர்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவிவரும் சூழ்நிலையில், சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நடமாடும் இராணுவ பிரிவினர் கடமையில் இணைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பின் சில பாகங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பின் சில பகுதிகளில் பொதுமக்களின் வெப்பநிலையை அளவிடும் பணிகளில் ஆறு பேர் கொண்ட நடமாடும் இராணுவ அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.