July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணைய விளையாட்டுக்காக பெற்றோரின் தங்க நகைகளை திருடிய பாடசாலை மாணவர் கைது!

இணையத்தில் வீடியோ கேம் விளையாடுவதற்காக தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்த பாடசாலை மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் வசிப்பவர்கள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய மாரவில கட்டுனேரிய பகுதியில் வசிக்கும் 18 வயது பாடசாலை மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதையடுத்து வீட்டு உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த மாணவன் மோட்டார் சைக்கிளை திருடி சிறிய தொகைக்கு விற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

அத்தோடு அவரது தாய் மற்றும் பாட்டியின் 500,000 வரை பெறுமதியான தங்க நகைகளை திருடி விற்று அந்த பணத்தை பயன்படுத்தி இணையத்தில் வீடியோ கேம்களில் ஈடுபட்டுள்ளமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த மாணவர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில் அவர் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருவதாகபொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே இணையவழி கல்வியை தொடர்ந்து, கையடக்கத் தொலைபேசி விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் அடிமையாவது அதிகரித்து வருவதாக கராப்பிட்டிய மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மருத்துவர் ரூமி ரூபன் அண்மையில்  தெரிவித்திருந்தார்.

இதனால் பெரும்பாலான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ‘கேமிங் கோளாறு’ (Gaming disorder) நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.