October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸ் சுற்றிவளைப்பு; போதைப் பொருளுடன் 7 பேர் கைது

(FilePhoto)

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்னான தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 50 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயினுடன் 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தப்பன்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 17 கிராம் 61 மில்லிகிராம் ஹெரோயினுடன் 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 75 ஆம் தோட்டத்தில் 13 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதி ராஜ மாவத்தையில் 5 கிராம் 270 மில்லிகிராம் ஹெரோயினுடன் 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தம்ம தோட்டத்தில் 5 கிராம் 902 மில்லிகிராம் ஹெரோயினுடன் 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடித்தகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயினுடன் 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, கந்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலசூரிய மாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான தயாரிப்புக்காக பயன்படுத்துவதற்கு தயார் நிலையிலிருந்த 1080 லீற்றர் கோடாவுடன் 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.