January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்து தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்

நியூசிலாந்தின் ஒக்லன்ட் பகுதியில் இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலை இலங்கை முஸ்லிம் சிவில் அமைப்புகள் கண்டித்துள்ளன.

நியூசிலாந்து தாக்குதலுக்கு இலங்கையின் 22 முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன.

நியூசிலாந்தில் வசித்த இலங்கையரின் தீவிரவாத தாக்குதல் தமக்கு அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தீவிரவாத நடவடிக்கைகள் எந்தவொரு இன, மத, கலாசாரத்துடனும் தொடர்புடையவை அல்ல எனும் நியூசிலாந்து பிரதமரின் கருத்துடன் தாம் உடன்படுவதாகவும் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட நியூசிலாந்து மக்களுடன் இலங்கை முஸ்லிம் அமைப்புகள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளன.