
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பயணத்தடையினை மீறி பொது மக்கள் வீதிகளில் பயணிப்பதோடு வீதிகளில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாது வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு காணப்படுகிறது.
இதனை தடுக்கும் முகமாக இன்று (04) காலை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கோப்பாய் பொலிசாரினால் விசேட சுற்று காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், அத்தியாவசிய சேவை தவிர்ந்து வீதியில் பயணித்தோர் மற்றும் பயணத்தடை வேளையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாது வீதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டோரின் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.