ஆசிரியர்களின் இணையவழி கற்பித்தல் செலவுகளை ஈடுசெய்வதற்காகவே 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் தீனேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவுள்ளதாக அமைச்சரவை அறிவித்தது.
இணையவழி கற்பித்தலில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் மேலதிக செலவுகளை ஈடுசெய்யவே, குறித்த தொகை முன்மொழியப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவையின் தீர்வில் தமக்கு உடன்பாடு இல்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.