November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தால் 10 இலட்சம் வரை அபராதம்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனிநபர்களுக்கு 10 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசன்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலையை மீறும் தனிநபர் மற்றம் நிறுவனங்கள் என இரு தரப்பினருக்குமான அபராத தொகைகள் அதிகரிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தனிநபருக்கான அபராதம் 20 ஆயிரத்தில் இருந்து 10 இலட்சம் வரையும் நிறுவனங்களுக்கான அபராதம் 2 இலட்சத்தில் இருந்து ஒரு கோடி வரையும் அதிகரிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர் மீது இருந்த மிகக் குறைந்த அபராதமான 1000 ரூபாய், 1 இலட்சம் வரையும் நிறுவனங்கள் மீதான மிகக் குறைந்த அபராதம் 5 இலட்சம் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.