மேல் மாகாணத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கொரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்கும் முறையை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், 14,000 கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டில் சிகிச்சை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இடைநிலை சிகிச்சை மையங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.