July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த வாரத்தில் வேகமாக தடுப்பூசி வழங்கிய நாடாக இலங்கை பதிவு!

vaccination New Image

கடந்த வாரத்தில் உலகிலேயே வேகமாக தடுப்பூசி வழங்கிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. ‘ourworldindata’ இணையத்தளத்தின் தரவுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன் படி இலங்கை கடந்த ஒரே வாரத்தில் நாட்டு மக்களில் 13% மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது.

இலங்கையை விட ஈக்வடார் 12.5%, புருனே 11.7% மற்றும் நியூசிலாந்து 11.6% பின்தங்கியுள்ளன.

குறித்த வலைத்தளம் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகம், இலங்கையில் முடிவடைந்த வாரத்தில் பெரும்பாலான தடுப்பூசிகளை வழங்கி உலகளவில் முன்னிலை பெற்றதற்காக தமது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளது.

இதேவேளை இலங்கையில், வெள்ளிக்கிழமை மாலை (03) வரை இலங்கையில் 12,604,733 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் 1 வது டோஸும் 8,801,182 பேருக்கு 2 வது டோஸும் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களின் குறிப்பிட்ட வயதினருக்கு பைசர்-பயோ என்டெக் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படலாம் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.