July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொவிட் மரணங்கள்

இலங்கையில் மேலும் 202 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

89 பெண்களும் 113 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் 155 பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எனவும் 5 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் 42 பேர் 30-59 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3,644 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51,401 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 61 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 80,166 ஆக உயர்வடைந்துள்ளது.