July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லிபியாவில் நடக்கவுள்ள தேர்தல்களை கண்காணிக்குமாறு இலங்கைக்கு கோரிக்கை!

லிபிய அரசாங்கம் தமது நாட்டில் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களைக் கண்காணிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸூக்கும் இலங்கையிலுள்ள லிபியா அரசின் தூதரகத்தின் பொறுப்பாளர் அமர் ஏ.எம். முப்தாவுக்கும் இடையே  இடம் பெற்ற சந்திப்பின் போதே கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளிலான பரஸ்பர நலன்கள் குறித்தும் இதன் போது இருவரும் கலந்துரையாடினர்.

லிபியாவின் தற்போதைய நிலைமை குறிப்பாக மார்ச் 2021 முதல் பதவியில் இருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் வகிபாகம் குறித்து லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார்.

இதனிடையே 2021 டிசம்பர் 24ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

அத்தோடு நடைபெற உள்ள தேர்தல்களை கண்காணிப்பதற்காக இலங்கையிலிருந்து  தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் லிபியாவின் முயற்சிகளுக்கு ஜனநாயக நாடாக இலங்கை ஆதரவளிப்பதாகவும் இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதன்போது தெரிவித்தார்.