January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் உருவான ‘ஆடத்தன்’ எப்போது திரைக்கு வரும்?: திரைப்படக் குழு விளக்கம்!

இந்திய சினிமாவின் தரத்தில் இலங்கையில் ‘ஆடத்தன்’ என்ற தமிழ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் ஒரு வருடத்திற்கு முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

நீண்ட காலமாகியும் படம் வெளியாக வில்லையே என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

”ஆடத்தன் ” படத்தின் இயக்குநர் ராதேயன் இது தொடர்பில் கூறுகையில்,

“இத்திரைப்படம் கடந்த வருடம் திரைக்கு வர இருந்தது ஆனால் நாட்டு சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

திரையரங்குகள் திறக்கப்படும் தருணம் திரைப்படம் வெளிவிடப்படும்” என அவர் தெரிவித்தார்.

 

மேலும் இத்திரைப்படமானது த்ரில்லர், காதல், சர்ந்த ஒரு மணிக்கு மட்டுபடுத்தபட்ட  திரைப்படம் என்ற மேலதிக தகவலையும் இயக்குனர் ராதேயன் பகிர்ந்து கொண்டார்.

இத்திரைப்படத்தினை இருதயராஜா ஜூலியானா மற்றும் முருகேசபிள்ளை ஞானப்பிரகாசம் இருவரும் (pramothaya , gr magic pictures) இணைந்து வழங்குகின்றனர்.

”ஆடத்தன் ” திரைப்படத்திற்கு மனோஜ் கதை வசனம் எழுதியுள்ளார். நிருக்சன் இசையமைத்துள்ளார்.

ஒளித்தொகுப்பு பணியை கிறிசாந் முன்னெடுத்துள்ளார். படத்தின் இயக்குநர் ராதேயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜா, குரவன்சன், சரோன், தனுசன் ஆகியோரினால் கலை வடிவமைப்பும் மீள் ஒலிப்பதிவு – வேணுப்பிரியன், திவிசாந் ஆகியோரினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பஜிந்ரா , டெனிக், இந்ரா, குரவுன்சன் மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு வருடத்திற்கு முன்னதாக பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷனும் இப்படக்குழுவினரும் இணைந்து படத்தின் trailer இனை வெளியிட்டிருந்தமை நினைவு கூரத்தக்கது.

This slideshow requires JavaScript.