
யால தேசிய வனத்தில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சிதுல்பவ்வ புனித பூமி பகுதியில் இடம்பெற்ற புதையல் திருட்டு சம்பவம் தொடர்பில் இதுவரையில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 31 ஆம் திகதி இரவு அங்குள்ள சிறிய தூபியை உடைத்து புதையல் திருடப்பட்டிருந்தது.
குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இதன்படி முதலில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்திருந்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி மேலும் இருவரை கைது செய்திருந்தனர்.
இதன்பின்னர் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வந்த பொலிஸ் குழுக்கள் நேற்றைய தினத்தில் மேலும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளன.
சதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குறித்த பௌத்த புனிதஸ்தலத்தை காவன்திஸ்ஸ மன்னன் நிர்மாணித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.