July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சுகாதார ஒழுங்குவிதிகளை கடுமையாக்க வேண்டும்”: சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

ஆசியாவிலே மிக மோசமான வைரஸ் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்படுகின்றதை மனதில் வைத்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. என்பதை ஏற்றுக்கொண்டு, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய வேண்டும் என உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இப்போதுள்ள தீர்வு எதுவொன்றால் நாட்டை மேலும் சில வாரங்கள் முடக்கி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதே ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல் சுகாதார வழிமுறைகளை கடுமையாக்கி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை மக்கள் பொது ஒன்றுகூடல்கள்,  அநாவசிய செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்வதன் ஊடாக எம் கண்முன்னே உள்ள ஆபத்திலிருந்து விடுபட முடியும் எனவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.