
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அந்தப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணிவரையில் இந்த நடவடிக்கை தொடர்ந்ததுடன், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது இவர்கள் சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடத்தியதுடன், வீதிகளிலும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.