January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டது

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 20 ஆம் திகதி நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இதற்கு முன்னர் செப்டம்பர் 6 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில், தற்போதைய கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு ஊரடங்கை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.