May 28, 2025 14:02:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் இருந்து 4 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வருகின்றன!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் 4 மில்லியன் டோஸ் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு ஒரே தடவையில் அனுப்பி வைக்கப்படும் அதிகளவிலான தடுப்பூசி தொகை இதுவாகும் என்று சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது வரையில் இலங்கைக்கு சீனாவில் இருந்து 22 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.