இலங்கையில் இதுவரையில் 11,700 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்றின் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் பொலிஸார் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்று நிலைமையால் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலைமையில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் நாட்டின் உள்ளக பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக போதைப் பொருள் மற்றும் குற்றக் கும்பல்கள் தொடர்பில் அவதானத்தடன் செயற்பட வேண்டியது அவசிமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.