June 14, 2025 12:22:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி மீண்டும் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அந்த வைத்தியசாலையில் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக பணியாற்றிய வைத்தியர் சத்தியமூர்த்தி மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.

இதன்போது பதில் பணிப்பாளராக மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா நியமிக்கப்பட்டிருந்தார்
இந்நிலையில் தற்போது சத்தியமூர்த்தி நாடு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் பதவியேற்குமாறு சுகாதார அமைச்சினால் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை 8 மணியளவில் வைத்தியசாலையிலுள்ள பணிப்பாளர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.