
இலங்கையில் அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டு இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவினால் வெள்ளிக்கிழமை (03) தொடக்கம் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் வௌ்ளைச் சீனியின் அதிகபட்ச மொத்த விலை 116 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு கிலோ கிராம் வௌ்ளைச் சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொதி செய்யப்பட்ட வௌ்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் சில்லரை விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு கிலோ சிகப்பு சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதேவேளை, பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சிகப்பு சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 128 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பச்சையரிசி மற்றும் சிவப்பரிசி ஒரு கிலோ அதிகபட்ச சில்லரை விலை 95 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதேபோல், நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லரை விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லரை விலை 103 ரூபாவாக நிர்ணயிக்கப்படுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லரை விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.