January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனோ தொற்றுக்குள்ளான சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் காலமானார்

கொரோனோ தொற்றுக்குள்ளான சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் காலமானார்.

கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன்,உள்நாட்டு,வெளிநாட்டு இணையத்தளங்களுக்கும் செய்திகள்,கட்டுரைகளை எழுதி வந்தார்.அதேவேளை,சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார்.

கடந்த ஐந்து நாட்களாக தலைவலி,இருமலுடன் இலேசான காய்ச்சல் பீடிக்கப்பட்டிருந்த நிலையில்,புதன்கிழமை (01)அண்டிஜன் பரிசோதனையை தானாக முன் சென்று பரிசோதித்த போது ,அவருக்கு தொற்று உறுதியானது.

அதனை தொடர்ந்து புதன்கிழமை மாலை 3 மணிக்கு தனது முகநூலில் “கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி,இருமலுடன் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன்.சற்று தேறிவரும் நிலையில் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.குணமடைந்த பின்னர் தடையின்றி எனது பணிகள் தொடரும். அதுவரை காத்திருங்கள்” என பதிவு ஒன்றினையும் பதிவேற்றி இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் (02)மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து,வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.அவற்றை எல்லாம் தாண்டியும் அவர் ஊடகத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.