January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் சதொசவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் மலையகத்தில் பல பிரதேசங்களிலும் மக்கள் இவ்வாறாக வரிசையில் நின்றதை அவதானிக்க முடிந்தது.

சந்தையில் சீனி கிலோ ஒன்று 200 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் விலை அதிகரிப்பை எதிர்பார்த்து பல இடங்களிலும் சீனி பதுக்கப்பட்டமையினால் சீனிக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சதோசவில் குறைந்த விலையில் சீனியை பெற்றுக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி சதொசவில் ஒரு கிலோ சிவப்பு சீனி, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ சீனி மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனை பெற்றுக் கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்துள்ளமையினால் மக்களால் கொள்வனவு செய்ய முடியாமல் வீடு திரும்ப நேரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.