
இலங்கையின் பலாங்கொடையிலுள்ள பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் இருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மஹரகம மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்த 34 வயதுடைய ஆணும், 24 வயதுடைய பெண்ணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நீர்வீழ்ச்சிப் பகுதியில் இளம் ஜோடியொன்று அநாகரிகமாக நடந்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த விடயம் குறித்து பசரமுல்லே தயவன்ச தேரர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருந்ததுடன், வீடியோவுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணணி குற்றவியல் பிரிவு, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.
சந்தேக நபர்கள் இதுபோன்று நாட்டில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆபாச வலைத்தளங்களுக்காக இது போன்ற வீடியோக்களை உருவாக்கி அதனூடாக இவர்கள் பணம் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.