
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்தில் இருந்து கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன், கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்தைப் பரிசோதித்த போதே, கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் கையடக்க தொலைபேசியில் உரையாடுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் பரிசோதிக்க வந்தபோது, கையடக்க தொலைபேசியை சிறைக் கூடத்துக்கு வெளியே வீசியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.