
இலங்கையின் தம்புள்ள மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அறவிடப்படும் பல்வேறு வரிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறு திருத்தங்களை கொண்டு வருவதற்கான யோசனை இன்று தம்புள்ள மாநகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திருத்தத்தில் நாய்களுக்கு வரி அறவிடுவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2022 ஆம் ஆண்டு முதல் தம்புள்ள மாநகர சபைக்கு உட்பட்ட 13 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்காக வரியொன்றை அறவிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியை கட்டாயம் வீட்டார் செலுத்த வேண்டுமென்று அறிவிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.