July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பணிப் பகிஷ்கரிப்பை கைவிட ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திற்கு நிபந்தனை!

இலங்கையில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பைக் கைவிட வேண்டுமாயின், அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தொழிற்சங்கம் நிபந்தனை முன்வைத்துள்ளது.

இலங்கையில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இரண்டு மாதங்களாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அமைச்சரவை மூலம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமது கோரிக்கைகள் மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கம் அமைச்சரவை மூலம் வழங்கிய தீர்வை சுற்று நிருபம் மூலம் வெளியிட்டால், பணி பகிஷ்கரிப்பைக் கைவிடத் தயார் என்று அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பக்ஞானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் விதம் திகதிகள் அடிப்படையில் சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ளது.