இலங்கையில் மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஒக்சிஜன் விநியோகிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளுக்கான ஒக்சிஜன் விநியோகத்தை கண்காணித்து, தடையின்றி ஒக்சிஜன் விநியோகத்தைத் தொடர அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒக்சிஜன் தேவையுடைய அனைத்து நோயாளர்களுக்கும் வழங்குவதற்கு முயற்சிக்கும்படியும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளர்கள் உயிரிழக்கும் நிலை உருவாக இடமளிக்க மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனைகளுக்கு தடையின்றி தேவையான ஒக்சிஜன் கிடைப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.