
photos: Facebook/ Buddhilini De Soyza
உலக வனவிலங்கு புகைப்படவியல் போட்டியில் இலங்கையின் புகைப்படக் கலைஞர்கள் இருவருக்கு உயர் பாராட்டு கிடைத்துள்ளது.
இலங்கையின் புத்தினி டீ சொய்சா மற்றும் ககன மென்டிஸ் விக்கிரமசிங்க ஆகியோரே, 57 ஆவது உலக வனவிலங்கு புகைப்படவியல் போட்டியில் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
பாலூட்டி விலங்குகளின் நடத்தை தொடர்பான பிரிவில் புத்தினி டீ சொய்சா சமர்ப்பித்த ‘சிறந்த நீச்சல்’ எனும் புகைப்படம் உயர் பாராட்டுக்குரியதாக பெயரிடப்பட்டுள்ளது.
அத்தோடு, 10 மற்றும் அதற்குக் குறைந்த வயதுடையோர் பிரிவில் சிறுவன் ககன மென்டிஸ் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ‘கொரோனா முடக்க கால படப்பிடிப்பு’ எனும் தலைப்பிலான புகைப்படமும் உயர் பாராட்டுக்குரியதாக பெயரிடப்பட்டுள்ளது.
96 நாடுகளில் இருந்து பங்குபற்றிய 55 ஆயிரம் புகைப்படக் கலைஞர்களிடையே இலங்கையர்கள் இருவரும் பாராட்டைப் பெற்றுள்ளனர்.