January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மூ’ மற்றும் ‘சி.1.2’ புதிய வைரஸ்களால் இலங்கைக்கு அச்சுறுத்தலா?

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொவிட் திரிபின் ‘சி.1.2’ வைரஸ் மற்றும் கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘மூ’ வைரஸ் என்பன இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இந்த புதிய வைரஸ்கள் பரவினால் தற்போது பதிவாகியுள்ள கொவிட் மரணங்களை விடவும் பல மடங்கு மரணங்கள் பதிவாகலாம் எனவும் வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘சி.1.2’ என்ற வைரஸானது 6 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

ஆசியாவுக்கு இது மிகப்பெரிய சவாலாக அமையும். ஏனென்றால் நியூசிலாந்து போன்ற நாடுகள் இப்போதும் இந்த வைரஸில் தாக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆசியாவில் ஏனையநாடுகளில் இது வேகமாக பரவலாம் என வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.

அதேபோல் தற்போது கொலம்பியாவிலும் ‘மூ’என்ற மிக மோசமான வைரஸ் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தற்போதைய கொவிட் வைரஸ் தடுப்பூசிகளுக்கு இது கட்டுப்படாத வகையில் வீரியம்கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 4677 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன நிலையில், நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களில் இது50 வீதமானவை என சுட்டிக்காட்டியுள்ள வைத்திய நிபுணர்கள், இதனால் இலங்கை இப்போதே கொவிட் அபாய வலயத்தில் உள்ள நாடாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.