இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்தை சந்திக்க இருந்த நிலையில், பேராயர் சந்திப்புக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக வெளியுறவு அமைச்சர், பேராயரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
குறித்த சில நிபந்தனைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்க முடியாது என்று பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடக்கிறது என்ற நம்பிக்கை தன்னுள் வர வேண்டும் என்று பேராயர் பதிலளித்துள்ளார்.
அரசாங்கம் கத்தோலிக்கர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டுமாயின் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி அறிக்கையின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்று பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.