இலங்கையில் அரிசி, சீனி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு நிலவுவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அரசாங்கத்திடம் இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சி போலி பிரசாரங்கள் மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது என்ற வீணான அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.