
(File photo)
புத்தளம் வைத்தியசாலையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த கர்ப்பிணி தாய் ஒருவர் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
தகவல்களின்படி, அந்தப் பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கொவிட் -19 நோய் தொற்றுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.
எனினும், கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் முடிந்த பிறகு, உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று குழந்தைகளின் பிரசவம் தொடர்பில் வைத்தியர்கள் அக்கறையுடன் செயற்பட்டனர்.
கர்ப்பத்தின் 35 ஆவது வாரத்தில் புத்தளம் மருத்துவமனை வைத்தியர்களினால் அந்தப் பெண்ணுக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு மூன்று குழந்தைகளும் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை இவ்வாறு பிறந்துள்ளன. தற்போது மூவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.