May 29, 2025 11:52:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோ தொடர்பில் சீஐடி விசாரணை!

இலங்கையின் பலாங்கொடையிலுள்ள பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நீர்வீழ்ச்சிப் பகுதியில் இளம் ஜோடியொன்று அநாகரிகமாக நடந்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன், அது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இலங்கையின் சுற்றுலா இடங்களில் ஒன்றாக பஹந்துடாவ நீர்வீழ்ச்சி விளங்கும் நிலையில், அந்த இடத்திற்கு இதுபோன்ற வீடியோ அவப்பெயரை ஏற்படுத்தும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து பசரமுல்லே தயவன்ச தேரர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவில் தோன்றும் இருவரும் குறித்த இடத்தில் அநாகரிகமான முறையில் நடந்தகொண்டமை தொடர்பில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயவன்ச தேரர் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில் தொன்றும் தம்பதியினர் வேறு இடமொன்றிலும் இதுபோன்ற வீடியோவை எடுத்துள்ளதாகவும், இவ்வாறாக விடயங்களால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இதனால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த வீடியோ தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.