அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவசர சட்டங்களின் மூலம் அரசாங்கத்தின் செலவைக் குறைப்பதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தைக் குறைப்பதும் நெருக்கடி நிலையைச் சமாளிக்க உதவாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதற்கான திட்டத்தை நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள நிலையில், அது வெற்றியளிக்காது என்று ஹர்ஷ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் வரும் அரச ஊழியர்கள் சம்பளங்களைக் குறைக்க முயற்சிக்கின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.