January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விளக்கமறியலில் இருந்த ரிஷாட் நாடாளுமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ரிஷாட், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, பாதுகாப்பு ஆடை அணிந்து கொண்டுவரப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அவருக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் நேற்று (21) கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, ரிஷாட் பதியுதீனை இன்றும் நாளையும் அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.