சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ரஞ்சன் ராமநாயக்க சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனவரி 12, 2021 முதல் 232 நாட்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க நேர்மையான, உண்மையைப் பேசும் மனிதராக இருந்ததாகவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தான் பலமுறை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், இம்முறை ஒரு நேர்மறையான பதிலை எதிர்பார்ப்பதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், மூத்த கலைஞர்கள், சட்ட அறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ரஞ்சனை விடுவிப்பதில் தலையிடுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.