November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சீமெந்தின் விலையும் அதிகரித்ததா?: நுகர்வோர் அதிகார சபை மறுப்பு!

இலங்கையில் சீமெந்து மூடையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சிலவாரங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் சீனி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமையும் ஏற்பட்டிருந்தது. இதனால் மக்கள் மத்தியில் அதிகளவில் பேசும் பொருட்களாக இவை மாறியிருந்தன.

இந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் சீமெந்தும் இணைந்துள்ளது.

இதற்கமைய, ஒரு மூடை சீமெந்து 950 ரூபா முதல் 1,005 ரூபா வரையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சீமெந்தின் விலை 1,100 ரூபாவுக்கு சில இடங்களில் விற்கப்படுவதாக கூறப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளிலும் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளார் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு தருணத்திலும் சீமெந்தின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.