யால தேசிய வனத்தில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சிதுல்பவ்வ சிறிய தூபியில் புதையல் திருட்டு இடம்பெற்றுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
புதையல் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தூபியை உடைத்து, புதையல் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யால தேசிய வனத்தில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த புனிதஸ்தலத்தை காவன்திஸ்ஸ மன்னன் நிர்மாணித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.