January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: வழக்குகளை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்!

2019 ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய மூவரடங்கிய குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்தவின் தலைமையில் அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரை உள்ளடக்கியதாக நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இந்த வழக்குகளை விசாரணை செய்யும் வகையிலேயே நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.