இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டுமா? என்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோரிடம் தடுப்பூசிக்கு கட்டணங்கள் அறவிடப்படுவதில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வோர் பணியகத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தியுள்ளார்களா என்ற விடயம் கவனத்தில் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு பதிவுக் கட்டணம் ஒன்று செலுத்த வேண்டும் என்பது அண்மையில் எடுத்த தீர்மானம் ஒன்று அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.