May 29, 2025 22:28:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா சிகிச்சைக்கான ‘ரீஜன்- கோவ்’ மருந்தை இறக்குமதி செய்ய அனுமதி

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் ‘ரீஜன்- கோவ்’ எனும் மருந்தை இறக்குமதி செய்ய தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் இரு மருந்துகளின் கலவையான ரீஜன்- கோவ் எனும் மருந்தை இறக்குமதி செய்ய உரிய நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க ரீஜன்- கோவ் மருத்து இன்றியமையாதது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த மருந்து தொடர்பாக இறக்குமதி செய்யும் நிறுவனம் அனுமதி இன்றி விளம்பர பிரசாரங்களை ஆரம்பித்ததால், இறக்குமதி தடை விதிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மருந்து இறக்குமதி நிறுவனத்தின் விளம்பரப்படுத்தல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பாதிப்பதாக இருந்ததாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி நிறுவனம் தவறை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மருந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.