November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரலாற்றுப் பதிவுடன் இலங்கையில் உச்சம் தொட்ட டொலர் விலை!

இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாணய மாற்று விகித அட்டவணைக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை  204.89 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் பதிவான அமெரிக்க டொலரின் மிக உயர்ந்த விற்பனை விலை இதுவாகும்.

இதற்கு முன்தாக அமெரிக்க டொலரின் அதிக பட்ச விற்பனை விலை 2021 ஏப்ரல் 15 ஆம் திகதி பதிவாகியிருந்தது. அன்றைய தினத்தில் மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்திற்கு அமைய, டொலரின் விற்பனை விலை  204.62 ரூபாவாக இருந்தது.

இதேவேளை, இன்றைய தினம் டொலரின் கொள்முதல் விலை ரூ. 198.90 ஆகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அட்டவணைக்கமைய ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ஏற்ற இறக்கங்களுடன் 202 ரூபாவை அண்மித்ததாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.