
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஜயருவன் பண்டாரவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
ஊடக சந்திப்பொன்றின் போது உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக குறிப்பிட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (31)காலை 8 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.