January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாரின் பிணை கோரிக்கை மீண்டும் நீதிமன்றினால் நிராகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாரின் பிணை கோரிக்கை மீண்டும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த போது தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாத்தின் மனைவி மற்றும் மாமனார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணியினால் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போதே பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கைகள் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.