January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட பதவியேற்றார்

இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு, ஒரு வருடத்தின் பின்னரே அவர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

மிலிந்த மொரகொட அமைச்சரவை அந்தஸ்துள்ள உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிலிந்த மொரகொட மற்றும் அவரது மனைவி ஜெனிபர் மொரகொட ஆகியோரை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

இலங்கையின் நலன்களை முன்னெடுப்பதற்தும் இலங்கை- இந்திய இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து பதவியேற்பு நிகழ்வில் மிலிந்த மொரகொட உரையாற்றியுள்ளார்.